Home இந்தியா வேலூர் நாடாளுமன்றம் : திமுக – அதிமுக மீண்டும் மோதல்

வேலூர் நாடாளுமன்றம் : திமுக – அதிமுக மீண்டும் மோதல்

773
0
SHARE
Ad

வேலூர் – கடந்த இந்தியப் பொதுத் தேர்தலின்போது, பணப் புழக்கம் காரணமாக இரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அந்தத் தொகுதியில் போட்டியிடவிருக்கும் தத்தம் வேட்பாளர்களை திமுகவும், அதிமுகவும் அறிவித்துள்ளன.

அதிமுக சார்பாக புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவிக்கப்பட்டிருக்கிறார். திமுக சார்பில் அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் பொருளாளருமான துரை முருகனின் புதல்வர் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த இரண்டு வேட்பாளர்களுமே கடந்த முறையும் அறிவிக்கப்பட்ட அதே வேட்பாளர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

தமிழகத்தில் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியை வென்றிருக்கும் அதிமுக தனது பலத்தைக் காட்டும் வண்ணம் வேலூர் தொகுதியையும் வென்று காட்ட முனைப்பு காட்டும்.

அதே சமயம் திமுகவும் ஏற்கனவே வென்றிருக்கும் 37 தொகுதிகளில் கூடுதலாக வேலூரையும் வென்று காட்டவும், மக்கள் செல்வாக்கு இன்னும் தங்களுக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கவும் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலை திமுக ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முற்படும்.

நாடாளுமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்துக் கண்டனங்களை எதிர்நோக்கியிருக்கும் அதிமுக தனது மக்கள் பலத்தை நிரூபிக்க வேலூர் தேர்தல் உதவக் கூடும்.