Home வணிகம்/தொழில் நுட்பம் விண்டோஸ் 1.0 மீண்டும் உயிர் பெற சாத்தியமா?

விண்டோஸ் 1.0 மீண்டும் உயிர் பெற சாத்தியமா?

918
0
SHARE
Ad

கலிபோர்னியா: மைக்ரோசோஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 1.0 இயக்க முறை தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறது. இதனால், பழைய விண்டோஸ் 1.0 இயங்குதளம் புதிய பொலிவுடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசோஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 இயக்க முறைதான் இப்போதுள்ள அண்மைய படிவமாகும். இதில் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்கள் இருந்தாலும், விண்டோஸ் 7 போல், பயனாளர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகவில்லை.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மைக்ரோசோஃப்ட் நிறுவனம் தனது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தள பக்கங்களில்விண்டோஸ் 1.0’ இயக்க முறை குறித்தான பதிவுகளை பதிவிட்டு வருகிறது.

#TamilSchoolmychoice

1985-ஆம் ஆண்டு முதன் முதலாக விண்டோஸ் இயக்க முறை அறிமுகம் செய்யப்பட்டது.