பாசிர் கூடாங்: கடந்த மார்ச் 7-ஆம் தேதி முதல் கிம் கிம் ஆற்று நீர் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக அமலாக்கப் பிரிவுகளுக்கு எதிராக வழக்கு தொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு கோர உள்ளதாக அவர்களை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் காமாருடின் அகமட் கூறினார்.
சுமார் 160 பேர் நஷ்ட ஈடு கோரி வருகிற ஜூலை 17-ஆம் தேதி வழக்கு தொடுக்க உள்ளதாக அவர் கூறினார்.
பாசிர் புதே மற்றும் தஞ்சோங் புத்ரி ரிசோர்ட் இடைநிலைப்பள்ளிகளை சார்ந்த 36 மாணவர்கள், 120 மீனவர்கள் மற்றும் ஆறு பொது மக்களும் இந்த வழக்கினை தொடுக்க உள்ளதாக அவர் கூறினார்.
ஒரு நபருக்கு 4,000 ரிங்கிட் முதல் 5,000 ரிங்கிட் வரையிலுமான பணத்தைப் பெற்று தர இந்த வழக்கு தொடுக்கப்படும் என்றும், மேலும் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டிய பொதுவான சேதங்கள் ஆகியவையும் அடங்கும் என்றும் அவர் கூறினார்.