மலாக்கா: கடந்த 2016-ஆம் ஆண்டில் தேசிய நீல பெருங்கடல் திட்டத்தின் (என்பிஓஸ்) கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைக்கேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் மலாக்காவின் அம்னோ கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை ஊழல் தடுப்பு ஆணையம் இன்று திங்கட்கிழமை கைது செய்துள்ளது.
இது குறித்து பேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் லத்தீஃபா கோயா, இந்த சம்பவத்தின் போது மாநில அரசின் ஆட்சிக்குழு உறுப்பினராக அவர் இருந்ததாக குறிப்பிட்டார்.
அவருடன் சேர்ந்து இதில் ஈடுபட்ட அலுவலக ஊழியரையும் உழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது. ஆயினும், இருவரும் எம்ஏசிசியின் பிணையின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை ஆயிர் கெரோ அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவர்.