Home வணிகம்/தொழில் நுட்பம் 73.8 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய ஜேம்ஸ் டைசன்!

73.8 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய ஜேம்ஸ் டைசன்!

776
0
SHARE
Ad

சிங்கப்பூர்: டைசன் லிமிடெட் தலைவரும், நிறுவனருமான ஜேம்ஸ் டைசனும் அவரது மனைவியும் சிங்கப்பூரின் ஆடம்பர சொகுசு அடுக்குமாடி வீடொன்றை 73.8 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு (54.2 மில்லியன் டாலர்) வாங்கியுள்ளனர்.

அறிமுகமில்லாத ஒரு நகரத்தில் ஒரு அடுக்குமாடி வீட்டுக்கு செலுத்தப்படும் மிக உயர்ந்த விலை இதுவாகும் என்று டி பிஸ்னேஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த மாதம், சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சாலையின் சற்று தொலைவில் அமைந்துள்ள அதீத சொகுசு அடுக்குமாடி குடியிருப்பொன்று 52 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனர் எட்வர்டோ சாவெரின் கடந்த 2017-ஆம் ஆண்டில் ஒரு சொகுசு அடுக்குமாடி வீட்டினை 60 மில்லியன் சிங்கப்பூர் டாலருக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. டைசன் செலுத்திய பணமானது அதனைவிட மேலானது.