Home உலகம் கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றில் இங்கிலாந்து

கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிச் சுற்றில் இங்கிலாந்து

2406
0
SHARE
Ad

பெர்மிங்ஹாம் – உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று வியாழக்கிழமை இங்கு நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 14-ஆம் தேதி நடைபெறும் உலகக் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து நியூசிலாந்தைச் சந்திக்கும்.

முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49-வது ஓவருக்குள்ளாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ஓட்டங்கள் எடுத்தது.

#TamilSchoolmychoice

224 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு இரண்டாவது பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 32.1 ஓவர்களிலேயே 226 ஓட்டங்கள் எடுத்தது. 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்தது.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து 8 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது.