Home நாடு எம்ஏபி மஇகாவிற்கு போட்டியாக இருக்காது!- டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

எம்ஏபி மஇகாவிற்கு போட்டியாக இருக்காது!- டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

1152
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி இந்தியர்களை பிரதிநிதிக்கும் புதிய கட்சியான மலேசிய முன்னேற்றக் கட்சியை (எம்ஏபி) நிறுவியது மஇகாவிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என்று மஇகா கட்சித் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

எனினும், அவரது இப்புதிய தொடக்கம் பக்காத்தான் ஹாராப்பானுக்குள்ளேயே போட்டிகளை உருவாக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

அவர்களது நேரடி போட்டியாளராக நாங்கள் இருக்கப்போவதில்லை, ஆனால், எம்ஏபியின் நேரடி போட்டியாளர்களாக பிகேஆர் மற்றும் ஜசெக இருக்கவுள்ளது” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

எதிர்க்கட்சி எப்போதுமே அச்சுறுத்தலுக்கு ஆளாகாது. ஏனென்றால் நாங்கள் ஒரு வருடமாக எதிர்க்கட்சியாக இருக்கிறோம், எங்கள் உறுப்பினர்கள் இன்னும் எங்களுடன்தான் இருக்கிறார்கள்என்று விக்னேஸ்வரன் மலேசியாகினியிடம் கூறினார்.

இருப்பினும், வேதமூர்த்தியின் புதிய கட்சி சரியான கட்டமைப்பை இதுவரையிலும் கொண்டிருக்கவில்லை என்பதால் அக்கட்சி இந்திய மக்களின் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்ய முடியும் என்று தாம் நம்பவில்லை என்று கூறினார்.

அவர் கட்டமைப்பை உருவாக்கும் நேரத்தில், அவரது செனட்டர் பதவி முடிந்துவிடும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இருந்தாலும், இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றொரு கட்சி இருப்பது நல்லதே என்று விக்னேஸ்வரன் கூறினார்.

அவர் இந்த ஒரு கட்சியைக் கொண்டிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், ஏனென்றால், பிரச்சனை உள்ள இந்தியர்கள் எவரும் சென்று நேரடியாக அமைச்சரைப் பார்க்க முடியும்என்று அவர் கூறினார்.