Home நாடு அன்வார்- அஸ்மின் முரண்பாடு: நிலை தடுமாறுமா பிகேஆர்?

அன்வார்- அஸ்மின் முரண்பாடு: நிலை தடுமாறுமா பிகேஆர்?

963
0
SHARE
Ad

போர்ட் டிக்சன்: பிகேஆர் கட்சி சில காலமாக அன்வார் மற்றும் அஸ்மின் ஆதரவாளர்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதனை வெளிப்படையாக அரசியல் தலைவர்களும், கட்சி உறுப்பினர்களும் மறுத்து வந்தாலும், உண்மை நிலை குறித்து மக்கள் அறிவர். அஸ்மினை ஓரினச் சேர்க்கை காணொளியுடன் இணைக்கும் நிலை ஏற்பட்ட பிறகு நிலைமை மேலும் மோசமடைந்தது.

எவ்வாறாயினும், நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பிகேஆர் கட்சி தலைவர்கள் ஒன்று கூடல் நிகழ்ச்சியில், அஸ்மின் முகாமுடன் தொடர்புடைய சில தலைவர்கள், குறிப்பாக கடந்த ஆண்டு கட்சித் தேர்தல்களின் போது அவருக்கு ஆதரவாக இருந்த, உதவித் தலைவர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மற்றும் உச்சமட்டக் குழு உறுப்பினர்கள் எலிசெபெத் வோங் மற்றும் ராஷீட் ஹஸ்னான் ஆகியோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

அன்வாருக்கு பதிலாக பிரதமர் மகாதீர் முகமட் அஸ்மினை பிரதமர் பதவியில் அமரச் செய்ய வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக ஊகங்கள் வெளியானதைத் தொடர்ந்து, இருவருக்குமான முரண்பாடுகள் அமைதியாக கட்சிக்குள் உலாவிக் கொண்டிருந்தன.

#TamilSchoolmychoice

அஸ்மினை சம்பந்தப்படுத்தி வெளியிடப்பட்ட காணொளியை வெளியிட்டவர் கட்சிக்குள்ளிருந்தே செயல்பட்டவர் என்று அஸ்மின் முழுமையாக நம்புகிறார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து அன்வாரின் அரசியல் செயலாளர் கைது செய்யப்பட்டார். எவ்வாறாயினும், பிகேஆர் கட்சித் தலைவரான அன்வார் தாம் இந்த விவகாரத்தில் சம்பந்தப்படவில்லை என்ற தனது நிலைப்பாட்டை எடுத்துக் கூறியுள்ளார்.

காணொளியின் நிகழ்தகவு உண்மையானது என்றாலும், முகத்தை அடையாளம் காணும் செயல்முறை தோல்வியில் முடிந்துள்ளதாக காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.  அக்காணொளியில் உள்ளவரை அஸ்மினுடன் தொடர்புபடுத்த முடியவில்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆக கடைசியாக, அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் ஓரினச் சேர்க்கை காணோளி விவகாரத்தில் சதிகாரர் என்ற குற்றச்சாட்டை பிகேஆர் கட்சியைச் சார்ந்த கோத்தா அங்கேரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹாலிமி என்று கூறப்படுகிறது. ஆயினும், அவர் அதனை மறுத்துள்ளார். இப்படியாக ஒவ்வொருவரின் மீது சந்தேக அலை பாய்ந்து கொண்டிருக்கையில் கட்சியின் நிலைத்தன்மை பாதிக்கப்படும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.