Home இந்தியா நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அமளி, சட்டசபை திங்கட்கிழமை ஒத்திவைப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அமளி, சட்டசபை திங்கட்கிழமை ஒத்திவைப்பு!

791
0
SHARE
Ad

பெங்களூரு: கர்நாடக சட்டப் பேரவையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க வேண்டும் என குமாரசாமிக்கு ஆளுனர் கெடு விதித்திருந்த நிலையில், வாக்கெடுப்பின் போது கடும் அமளி நீடித்ததைத் தொடர்ந்து கர்நாடக சட்டசபையை வருகிற திங்கட்கிழமை வரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டது.

நேற்றைய சட்டப் பேரவை கூட்டத்தில் பேசிய குமாரசாமி, பாஜகவை கடுமையாக எச்சரித்துள்ளார். தனது 14 மாத அரசை கவிழ்க்கவே பாஜக அனைத்து சதி வேலைகளையும் செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதிருப்தி அடைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 40-லிருந்து 50 கோடி  ரூபாய் வரையிலும் வழங்குவதாக பாஜக பேரம் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதனிடையே, பேசிய எடியூரப்பா, உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என கடந்த வியாழக்கிழமை பாஜகவினர் ஆளுனரை சந்தித்து முறையிட்ட நிலையில், அதனை நடத்துமாறு சபாநாயகரை ஆளுனர் கேட்டுக் கொண்டார். ஆளுனரின் வேண்டுகோளுக்கு எதிராக பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அவை நேற்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி 16 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக குறைந்துவிடும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.  ஆனால், அவருக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கும்.