Home நாடு தமிழ் இடைநிலைப் பள்ளி குறித்து ஆராயப்பட்டு வருகிறது!- கல்வி அமைச்சு

தமிழ் இடைநிலைப் பள்ளி குறித்து ஆராயப்பட்டு வருகிறது!- கல்வி அமைச்சு

1061
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்திய சமூகத்தின் கல்வி நிலையை மேம்படுத்த தமிழ் தேசிய வகை இடைநிலைப் பள்ளியை நிறுவ வேண்டியதன் அவசியத்தை கல்வி அமைச்சு ஆய்வு செய்து வருவதாக துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கூறினார்.

இந்த விவகாரத்தை மேலும் ஆராய அமைச்சு இந்திய சமூக கல்வி ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த பரிந்துரைக்கு ஒரு முழுமையான ஆய்வு தேவைப்படுகிறது. அப்போதுதான் நீண்டகால தீர்வுகளைப் பெற முடியும். மாணவர் கணிப்புகள், சட்டம் மற்றும் அரசாங்க நிதி திறன்கள் போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் இதில் ஆராயப்பட வேண்டும்என்று இன்று திங்கட்கிழமை அவர் மேலவையில் பேசினார்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியின் கட்டுமானத்தின் நிலையை அறிய விரும்பிய செனட்டர் டத்தோ டி.மோகனின் கேள்விக்கு தியோ இவ்வாறு பதிலளித்தார். பக்காத்தன் ஹாராப்பானின் இந்தியர்களுக்கான ஐந்தாவது சிறப்பு வாக்குறுதியாக இது அமைந்துள்ளது.

பல்வேறு தரப்பினரின் கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை அரசாங்கம் பரிசீலிக்கும் என்று தியோ கூறினார். குறிப்பாக இதற்காக இந்திய சமூகத்தின் கருத்துகள் ஏற்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இடைநிலைப் பள்ளியை அமைப்பது 1996-ஆம் ஆண்டுக்கான கல்விச் சட்டம் (சட்டம் 550) பிரிவு 30 மற்றும் 31-இன் கீழ் உள்ள விதிகளுக்கு உட்பட்டது என்றும் அவர் தெளிவுப்படுத்தினார்.