ஹாங்காங்: முகமூடி அணிந்து தடியுடன் ஹாங்காங் யூவென் லாங் இரயில் நிலையத்திற்குள் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட மர்ம மனிதர்கள் அங்குள்ள மக்களை கொடுரமாக தாக்கி உள்ளனர்.
காவல் துரையினர் உடனடி நடவடிக்கையை எடுக்காதது, ஹாங்காங் அரசாங்கத்தின் மீதான சந்தேகத்தையும் வெறுப்பையும் மேலும் அதிகரிக்கச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், வெள்ளை நிற ஆடை அணிந்து இரயில் நிலையத்தில் மற்றும் இரயிலுக்குள் உள்ள மக்களை கொடுரமாக தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன.
இந்தத் தாக்குதலில் 45 பேர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சமீபத்திய ஜனநாயக சார்பு பேரணியைத் தொடர்ந்து, அங்கு கலகப் பிரிவு காவல் துறையினர் எதிர்ப்பாளர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் இரப்பர் தோட்டாக்களை வீசினர்.
மக்களைத் தாக்கிய அக்கும்பல் யாரென்று தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவர்கள் பயணிகளையும், போராட்டத்திலிருந்து திரும்பிச் செல்வதற்காக செயல்பட்டதாகத் தெரிகிறது.