Home நாடு சுங்கை சிலாங்கூர் மாசுபாடு, காவல் துறை விசாரிக்க வேண்டும்!- சேவியர் ஜெயகுமார்

சுங்கை சிலாங்கூர் மாசுபாடு, காவல் துறை விசாரிக்க வேண்டும்!- சேவியர் ஜெயகுமார்

909
0
SHARE
Ad

புத்ராஜெயா: சுங்கை சிலாங்கூரில் மூல நீரை மாசுபடுத்திய டீசல் கசிவு குறித்து விசாரணை நடத்த காவல் துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார். இது ஒரு நாசவேலையாக தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

காவல் துறைத் தலைவரிடம் கலந்துரையாடிய பின்னர், விசாரணை நடத்துமாறு காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவதை நான் உறுதிப்படுத்துவேன்என்று அவர் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

நீர் மாசுபாட்டின் விளைவாக சுங்கை சிலாங்கூர் நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டங்களான 1, 2, 3 மற்றும் ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8.15 மணி வரை மூடப்பட்டது.

#TamilSchoolmychoice

இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு மீண்டும் அந்நிலையங்கள் செயல்படத் தொடங்கின.

சிலாங்கூர் மாநில மணல் சுரங்க சலுகை குழுமம் (செமஸ்டா) இந்த விவகாரத்தில் நாசவேலை நடந்திருக்கலாம் எனும் வாய்ப்பை நிராகரிக்கவில்லை.

ஜூலை 21-ஆம் தேதி மாலை 6.15 மணியளவில் ஹாங் துவா ஏரிக்கு அருகிலுள்ள சுங்கை சிலாங்கூர் பகுதியில் டீசல் கசிவைக் கண்டறிந்ததாக செமஸ்டா தெரிவித்தது.