Home இந்தியா சந்திரயான்-2 விண்ணில் பாய்ச்சப்பட்டது!

சந்திரயான்-2 விண்ணில் பாய்ச்சப்பட்டது!

1056
0
SHARE
Ad

(மலேசிய நேரப்படி மாலை 5:13) புது டில்லி: நிலவின் தென்துருவத்தை முதன் முதலாக ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவால் கடந்த ஜூலை 15 விண்ணில் ஏவப்படவிருந்த சந்திராயன் 2 விண்கலம் திடீரென தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அந்த தொழில்நுட்பக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு  ஜூலை 22-ஆம் தேதி பகல் 2.43 மணியளவில் சந்திராயன் மீண்டும் விண்ணில் பாயும் என இஸ்ரோ தனது டுவிட்டர் தளத்தில் அறிவித்திருந்தது.

அதுபடியே, இன்று திங்கட்கிழமை மலேசிய நேரப்படி மாலை 5:13 மணிக்கு சந்திரயான் -2 விண்ணில் பாய்ச்சப்பட்டது.  இதற்கான 20 மணி நேர இறங்குமுகக் கணிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.43 மணிக்கு தொடங்கியது.

#TamilSchoolmychoice

சந்திரயான்– 2 ஏவுவது காலதாமதமானதால், அதன் பயணத்தில் சில மாற்றங்களை இஸ்ரோ செய்துள்ளது. முன்னதாக பூமியை 17 நாட்களுக்கு சுற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது 23 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதுநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக 1000 கோடி ரூபாய் மதிப்பில் சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ உருவாக்கியிருக்கிறது.