Home இந்தியா காஷ்மீர்: உண்மையைக் கூறுவது யார்? மோடியா? டிரம்பா?

காஷ்மீர்: உண்மையைக் கூறுவது யார்? மோடியா? டிரம்பா?

671
0
SHARE
Ad

புது டில்லி: பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் காஷ்மீர் குறித்த விவகாரத்தில் நடுவராக இருந்து செயலாற்றும்படி கேட்டுக் கொண்டார் என்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கூற்றை இந்திய வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு வெள்ளை மாளிகையில் கடந்த திங்கட்கிழமை விருந்தளித்த அதிபர் டிரம்ப், “காஷ்மீர் விவகாரத்தில் என்னால் உதவ முடிந்தால், நான் ஒரு நடுவராக இருக்க விரும்புகிறேன்என்று டிரம்ப் கூறியுள்ளார்.

நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடியுடன் இருந்தேன். நாங்கள் இந்த விவகாரத்தைப் பற்றி பேசினோம். அவர் ஒரு வேளை நீங்கள் நடுவராக இருக்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். நான் எங்கே என்று கேட்டேன், அவர் காஷ்மீர் என்று கூறினார்.  இந்த விவகாரம் பல ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது, அவர்கள் (இந்தியா) அதைத் தீர்க்க விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன், நீங்கள் (இம்ரான் கான்) அதைத் தீர்க்க விரும்புகிறீர்கள் என்றால் நான் நடுவராக இருந்து செயல்படுகிறேன்.” என்று அதிபர் டிரம்ப் இம்ரான் கானுடனான பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

நீங்கள் நடுநிலையாக இருந்து தீர்க்க முடிந்தால் மக்களின் பிரார்த்தனை உங்களுடன் இருக்கும்என்று இம்ரான் கான் பதிலளித்துள்ளார்.

தொடர்ச்சியான டுவிட்டர் பதிவுகளின் மூலமாக இந்திய வெளியுறவு அமைச்சு இந்த கோரிக்கைகளை பிரதமர் மோடி முன்வைக்கவில்லை என கூறியுள்ளது.