Home நாடு அஸ்மின் காணொளி: “சூத்திரதாரி யாரென்று தெரிந்தால் காவல் துறையிடம் தெரிவிக்கவும்!”- வான் அசிசா

அஸ்மின் காணொளி: “சூத்திரதாரி யாரென்று தெரிந்தால் காவல் துறையிடம் தெரிவிக்கவும்!”- வான் அசிசா

612
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாலியல் விவகாரம் தொடர்பான காணொளிகள் குறித்து தங்களிடம் உள்ள எல்லா தகவல்களையும் காவல் துறைக்கு எடுத்துச் செல்லுமாறு பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் முகமட் அஸ்மின் அலி மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரியை பக்காத்தான் ஹாராப்பான் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.

இருவரும் சமீபத்தில் வெளிப்படையாக இந்த காணொளிகளுக்குப் பின்னால் இருப்பது யாரென்று தங்களுக்குத் தெரியும் என குறிப்பிட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

முன்னதாக, அஸ்மின் தம்மை சம்பந்தப்படுத்திய ஓரினச் சேர்க்கை காணொளி பொதுவில் விடப்பட்டதற்கு சூத்திரதாரியாக இருந்து செயல்பட்டது யாரென்ற அடையாளம் தனக்குத் தெரியும் என்று கூறியிருந்தார். ஆயினும், இது காவல் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், தாம் அதனில் தலையிட முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.