Home வணிகம்/தொழில் நுட்பம் பினாங்கு தமிழ்ப் பள்ளிகளுக்கான தகவல் தொழில்நுட்பத் தொடர்பு போட்டிகள்

பினாங்கு தமிழ்ப் பள்ளிகளுக்கான தகவல் தொழில்நுட்பத் தொடர்பு போட்டிகள்

1929
0
SHARE
Ad
பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு

பட்டவொர்த் – பினாங்கு மாநில அளவிலான தமிழ்ப் பள்ளிகளுக்கிடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி கடந்த சனிக்கிழமை ஜூலை 20-ஆம் தேதி பினாங்கு மெட்ரிகுலேஷன் கல்வி மையத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.

அந்தப் போட்டிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு “மாணவர்கள் தகவல் தொடர்பு தொழில்நுட்ப திறன் சாதனங்களை சிறந்த முறையில் கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

இந்தப் போட்டிகளை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வரும் மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்தின், தித்தியான் டிஜிட்டல் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 10 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகமய மாறுதலுக்கேற்ப தகவல் தொடர்புத் திறனறிவை (ICT) பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு சீரிய முறையில் செயல்வடிவம் கண்டு வருகிறது.

#TamilSchoolmychoice

புறநகர், நகர்புற மாணவர்களிடையே அமையப்பெற்ற தகவல் தொடர்புத் திறனறிவின் (ICT) இடைவெளியை குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. தித்தியான் டிஜிட்டல் திட்டம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுற்று வட்டார பொது மக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்கின்றன.

தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகள்

தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கம், கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம், மலேசிய சமூக கல்வி அறவாரியம், மலேசிய உத்தமம் ஆகிய அமைப்புகள் இணைந்து இப்போட்டியை வழிநடத்துகின்றன.

இதில் 5 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் புதிர்ப்போட்டி மட்டுமே மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய பினாங்கு மாநில 2019 ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் இரவிசந்திரன் செல்லகண்ணு அவர்கள், கடந்த வருடம் பினாங்கு மாநிலத்தில் எல்லா தமிழ்ப்பள்ளிகளும், மாணவர்களும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் கலந்துக் கொண்டனர், அதே போல் அடுத்த வருடமும் அனைத்து தமிழ்ப் பள்ளிகளும் இந்த தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் மாணவர்களின் வசதிக்காக அடுத்த வருடம் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடத்த வழிவகை செய்யப்படும். இதன் மூலம் மாணவர்கள் தொழில்நுட்ப்பத் துறையில் அதிக ஆர்வத்துடன் கலந்துக் கொள்ள முடியும். மாணவர்களை ஊக்குவித்து, இன்றைய போட்டிக்கு அழைத்து வந்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மேலும், இப்போட்டியை ஏற்பாடு செய்த தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

கஸ்தூரி ராணியின் சிறப்புரை

நிகழ்ச்சியில் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி ராணி பட்டு தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப்போட்டியினை ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். எதிர்வரும் காலங்களில் தொழில்நுட்பம் தொடர்பான போட்டிகளை நடத்த பினாங்கு மாநில அரசாங்கம் இணைந்து செயல்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக அவர்தம் உரையில் கூறினார்.

தொடர்ந்து இன்றைய தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அவர்களிடம் இருக்கும் திறன்பேசிகளை கவனமாகவும், தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கஸ்தூரி பட்டு. “பல விதமான சமுதாய சீர்கேடுகளை விளைவிக்கும் செயல்கள் இந்த திறன்பேசிகளின் மூலம் தான் நடைபெறுகிறது. இன்றைய தொழில்நுட்பத்தில் இருக்கின்ற பல நன்மை தீமைகளை அறிந்து மாணவர்கள் செயல்பட வேண்டும், அதன் தொடர் வளர்ச்சியில் பல மாணவர்கள் சாதனைகளைப் புரிய வேண்டும்” என்றும் கஸ்தூரி பட்டு கேட்டுக் கொண்டார்.

அவரின் உரையில் கல்வியின் அவசியத்தையும், அதன் தொடர் வளர்ச்சியையும் பினாங்கு மாநிலத்தில் பார்க்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார். பல உலகத் தலைவர்கள் முன்னெடுத்த கல்விப் புரட்சியை மாணவர்களுடன் பகிர்ந்துக் கொண்டு அதன் வழியில் மாணவர்கள் செல்ல வேண்டும் என்றுக் கூறி, இன்றைய நிகழ்ச்சியில் அழைத்தற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.

இவ்வாண்டு பினாங்கு மாநிலத்திலிருந்து சுமார் 85 மாணவர்கள் 27 பள்ளிகளிலிருந்து இப்போட்டியில் கலந்து கொண்டனர். தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் உள்ளன. அதில் புதிர்ப்போட்டி மாநில நிலையில் நடத்தப்பட்டு, தேசிய நிலைக்கு மாணவர்கள் தேர்வு பெறுவர். தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் இருபரிமாண அசைவூட்ட போட்டி, வரைதல் போட்டி, அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி, மற்றும் ஸ்கேரேச் போட்டி என அனைத்துப் போட்டிகளிலும் மாநில நிலையில் மாணவர்கள் தேர்வு பெற்று, தேசிய நிலையிலான போட்டியில் மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறந்த படைப்பை வழங்குவர்.

தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மலாயா பல்கலைகழக வளாகத்தில் நடைபெறும்.

பினாங்கு மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்கள்.

PENANG STATE LEVEL
PTD ICT QUIZ WINNERS 2019

Name of Student –         School Name

1. Reshman Mathivaanan SJKT Permatang Tinggi, Simpang Ampat
2. Neshakar Murali SJKT Permatang Tinggi, Simpang Ampat
3. Yugesh Veeerasingam SJKT Ladang Juru, Juru
4. Sivapravin Ganesan SJKT Batu Kawan, Batu Kawan
5. Tharcannaa Deebagaran SJKT Ladang Krian, Krian
6. Arisha Devi Arivananthan SJKT Subramaniya Barathee, Gelugor
7. Thanya Shree Nandhakumar SJKT Valdor, Valdor
8. Thurgasini Chandran SJKT Rajaji, Air Hitam
9. Megasarma Poominathan SJKT Ladang Sempah, Sg. Bakap
10. Devi Manivannan SJKT Subramaniya Barathee, Gelugor
11. Nachitraa Panerselvan SJKT Batu Kawan, Batu Kawan
12. Ravivarma Krishnan SJKT Subramaniya Barathee, Gelugor
13. Pugan Mathivanan SJKT Ladang Jawi, Jawi
14. Ilakkiyan Vijendran SJKT Sg. Ara, Sg. Ara
15. Vireshwaraavell Manogaran SJKT Mak Mandin, Mak Mandin

Note: 15 Winners from Penang State Level ICT Quiz 2019 have qualified for National Level ICT Competition 2019

மேற்காணும் பட்டியல் பினாங்கு மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 15 நிலை வெற்றியாளர்களின் பட்டியலாகும். இம்மாணவர்கள் தேசிய நிலை போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.