Home Photo News ஹாங்காங்: கண்ணீர் புகைக் குண்டுகள் – காவல் துறையினரின் அடக்குமுறை – போராட்டக் காட்சிகள்

ஹாங்காங்: கண்ணீர் புகைக் குண்டுகள் – காவல் துறையினரின் அடக்குமுறை – போராட்டக் காட்சிகள்

702
0
SHARE
Ad

ஹாங்காங் – வார இறுதியில் தொடங்கிய ஹாங்காங் ஜனநாயக போராட்டவாதிகளின் ஆர்ப்பாட்டங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகப் பெரிய அளவில் விரிவடைந்ததைத் தொடர்ந்து காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகள், தடியடித் தாக்குதல்கள் மூலம் ஆர்ப்பாட்டங்களைக் கலைக்க முற்பட்டனர்.

ஹாங்காங் மக்கள் பலரும் அந்தப் போராட்டக் காட்சிகளை சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்கள். காவல் துறையினரின் அடக்குமுறை, அதை வயது வித்தியாசமின்றி துணிச்சலாக எதிர்த்து நிற்கும் பொதுமக்கள், அபாயகரமான சூழ்நிலையிலும் போராட்டத்தின் தன்மையை தங்களின் புகைப்படக் கருவிகளில் பதிவேற்றத் துடிக்கும் ஊடகவியலாளர்கள் என இந்த ஜனநாயகப் போராட்டத்தின் பன்முகத் தன்மையை விவரிக்கும் அந்தப் படக் காட்சிகளில் சிலவற்றை இங்கே காணலாம்:

-செல்லியல் தொகுப்பு

#TamilSchoolmychoice