Home நாடு மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாஸ் பாதுகாக்கும்!

மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாஸ் பாதுகாக்கும்!

930
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மஇகாவுடன் நெருக்கமான உறவை பாஸ் கட்சி வரவேற்கிறது என்று அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று திங்கட்கிழமை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பாஸ் மஇகாவின் பார்வையைப் பாராட்டுகிறது. மஇகா மற்றும் பரந்த சமூகத்துடனான நெருக்கமான ஒத்துழைப்பை பாஸ் ஆதரிக்கிறது.என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் ஆண்டு மாநாட்டில் பேசிய மஇகா தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், தேசிய முன்னணியின் பலத்தை மீண்டும் மீட்டெடுப்பதற்கான ஒரு வழியாக பாஸ் மற்றும் அம்னோவுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஏற்றுக் கொள்ளலாம் என்று தனது கட்சி உறுப்பினர்களிடம் பேசினார்.

#TamilSchoolmychoice

பாஸ் கட்சியின் மீது வைக்கப்பட்ட தீவிரமான விமர்சனங்கள் ஒரு தவறான கூற்று என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாஸ் கட்சியின் தலைவர் ஹாடி அவாங்கை சந்தித்த போது, அக்கட்சியின் நிலைப்பாட்டை அறிய முடிந்ததாகவும், வேறு எந்த மதத்தையும் பாஸ் எதிர்க்கவில்லை என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

இது குறித்து தனது முகநூலில் பதிவிட்ட பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங், விக்னேஸ்வரனுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

பாஸ் என்றுமே இஸ்லாத்தை அனைவருக்கும் நீதி வழங்கும் மதமாகவும், எந்தவொரு மத வற்புறுத்தலையும் அறிமுகப்படுத்தும் கட்சியாகவும் செயல்படாது.  மேலும் மலேசியாவில் பன்மைத்துவ சமுதாயத்தின் நல்லிணக்கத்தை பாதுகாக்கும்என்று அவர் மேலும் கூறினார்.

மஇகாவின் மலாய்காரர்களுடனான உறவினை அம்னோவிலிருந்து தொடர்ந்த வரலாற்றை விக்னேஸ்வரன் நினைவுக்கூர்ந்தார். பாஸ் கட்சியைப் போன்ற அணுகுமுறையை மஇகா கடைப்பிடிக்க வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.

நான் ஒரு தலைவராக இருந்து இந்த முடிவை எடுக்க வேண்டும். எனது மக்கள் இந்த நாட்டில் நிம்மதியாக வாழ விரும்பினால், நாம் பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். எனது சொந்த நலனுக்காக அல்ல, ஆனால் எதிர்கால சந்ததியினருக்காக” என்று அவர் குறிப்பிட்டார்.