இந்த வாரமும் ஆறுபேர் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட சக பங்கேற்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
சேரன், மீரா மிதுன், சரவணன், அபிராமி, கவின், சாக்ஷி அகர்வால் ஆகியோரே வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்ட அந்த அறுவராவர்.
சனிக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன்,அறுவரில் சேரன் காப்பாற்றப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு ஒளியேறிய நிகழ்ச்சியில் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் வழக்கம்போல் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறி வெளியே இருந்த மேடையில் கமல்ஹாசனைச் சந்தித்து உரையாடினார்.