Home நாடு “ஏழு முறை முத்தமிட்டுக் கொண்டாலும், அன்வார் பிரதமர் ஆக முடியாது!”- சாஹிட் ஹமீடி

“ஏழு முறை முத்தமிட்டுக் கொண்டாலும், அன்வார் பிரதமர் ஆக முடியாது!”- சாஹிட் ஹமீடி

1286
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பக்காத்தான் ஹாராப்பானின் பிரதமர் பதவி மாற்றத் ஒப்பந்தத்தின் கீழ் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவி ஏற்க முடியாது என்று தாம் நம்புவதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்துள்ளார்.

அன்வார் பிரதமராக ஆசைப்படுவது அனைவருக்கும் தெரியும் என்றும் டாக்டர் மகாதீர் அதற்கு வழி விடமாட்டார் என்றும் பொதுமக்களுக்கு தெரியும் என சாஹிட் கூறினார்.

#TamilSchoolmychoice

ஒரு நாளைக்கு ஏழு முறை வாயில் முத்தமிட்டுக் கொண்டாலும், உண்மை என்னவென்று மக்களுக்கு தெரியும்” என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஜசெகவுடன் தொடர்ந்து நீடித்து வரும்வரை அன்வாருடன் எந்த அரசியல் ஒத்துழைப்பையும் அம்னோ கொண்டிருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.