Home வணிகம்/தொழில் நுட்பம் வாட்சாப்: ஒரே கணக்கை இரு சாதனங்களில் பயன்படுத்தலாம்!

வாட்சாப்: ஒரே கணக்கை இரு சாதனங்களில் பயன்படுத்தலாம்!

969
0
SHARE
Ad

கலிபோர்னியா: ஐபோன் பயனர்களுக்காக வாட்சாப் ஒரு புதிய பீட்டா புதுப்பிப்பை (Beta Update) வெளியிட்டுள்ளது.

அந்த புதிய வடிவம் நிறைய மாற்றங்களைக் கொண்டுள்ளது.  அதன் தகவலின்படி, ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் ஒரே கணக்கை இயக்கும் வசதியை வாட்சாப் கொண்டு வரவுள்ளது

இதன்படி, பயனர்கள் தங்கள் வாட்சாப் கணக்கை ஐபாட், ஐபோன் என இரண்டு சாதனங்களிலும் ஒரே நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதேபோல், அதே வாட்சாப் கணக்கை ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் என இரு சாதனங்களிலும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்.

#TamilSchoolmychoice

வாட்சாப், டெஸ்ட்ஃப்லைட் பீட்டா சோதனையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐஓஎஸ் (iOS) புதுப்பிப்புக்கான வாட்சாப் வடிவம் 2.19.80.16-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.  வாட்சாப் 3டி டச் (3D touch) புகைப்படத்தை சேமிக்கும் திறனை நீக்குதல் அம்சத்தை இந்த புதிய வடிவம் கொண்டுள்ளதாக  வாபீட்டாஇன்போவின் (WABetaInfo) தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அரட்டைகளில் பதிவிறக்கம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களை சரி செய்யவும், அது குறித்த அறிவிப்புகளை அளிக்கும் வசதிகளை இந்த புதிய வடிவத்தில் வாட்சாப் அறிமுகப்படுத்தியுள்ளது.