கோலாலம்பூர்: டாக்டர் மகாதீர் முகமட் ஐந்தாண்டு காலம் முடிவடையும் வரை பிரதமராக நீடித்த்திருப்பதற்கு அம்னோவும் பாஸ் கட்சியும் ஆதரவு அளித்ததற்கு பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி இன்று திங்கட்கிழமை நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பக்காத்தான் ஹாராப்பான் கட்சிகளின் கூட்டு ஒத்துழைப்பின்படி பிரதமர் மகாதீர் முகமட்டிடமிருந்து பிரதமர் பதவி அன்வார் இப்ராகிமிற்கு செல்ல வேண்டியது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பல முறை பிரதமரும் தாம் கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றுவார் எனக் கூறி வந்தார்.
இதற்கிடடையில், பிகேஆர் கட்சியின் துணைத் தலைரை குறிவைத்து ஓரினச் சேர்க்கை காணொளிகள் குறித்து அன்வார் கூறிய கருத்துக்குப் பின்னர், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் ஸ்திரத்தன்மை, தொடர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய மலேசியாவை தொடர்ந்து வழிநடத்த மகாதீர் தொடர்ந்து பணியில் இருப்பது அவசியமாகிறது என்று அஸ்மின் கூறியுள்ளார்.
பக்காத்தான் ஹாராப்பானின் ஒப்பந்தத்தின் கீழ், மகாதீருக்குப் பிறகு இரண்டு ஆண்டுகளில் அன்வார் பிரதமராக பதவியேற்க வேண்டும். எவ்வாறாயினும், கடந்த தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பானுக்கு வழங்கப்பட்ட ஐந்தாண்டு தவணை முடிவடையும் வரை மகாதீர் பிரதமராக இருக்க வேண்டும் என்று பாஸ் மற்றும் அம்னோ மகாதீரை வலியுறுத்தியுள்ளனர்.
அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் ஆதரவு, மலேசிய அரசியலில் ஒரு புதிய பக்கத்தை பிரதிபலிக்கிறது என்று அஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.