Home One Line P1 “ஆண்களை பாதுகாக்க பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டம் தேவையற்றது!”- அன்வார்

“ஆண்களை பாதுகாக்க பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டம் தேவையற்றது!”- அன்வார்

926
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சட்டங்களுக்கான முன்மொழிவை பிகேஆர் கட்சி நிராகரித்துள்ளது. இம்மாதிரியான சட்டங்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் அமைவதாக அக்கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

செனட்டர் முகமட் இம்ரான் அப்துல் ஹாமிட் முன்மொழிந்த இந்த திட்டத்தை திருப்பிப் பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த திட்டம் ஆண்கள் ஒழுக்கக்கேடானவர்கள் மற்றும் மோசமான செயல்களில் ஈடுபடுவதற்கு எளிதில் மயக்கப்படுகிறார்கள் என்ற தோற்றத்தையும் தருகிறது,” என்று அவர் இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நேற்று புதன்கிழமை, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் ஆண்கள் மயங்கி, சிக்கிக் கொள்ளாமல் பாதுகாக்க முகமட் இம்ரான் பாலியல் துன்புறுத்தல் சட்டத்தை முன்மொழிந்தார்.

பெண்களின் நடத்தை, உரையாடல் மற்றும் ஆடை அலங்காரம் போன்ற விவகாரங்களை உள்ளடக்கிய சட்டம் ஒன்றை நிறுவுங்கள். இத்தகைய செயல்கள் ஆண்களை கவர்ந்திழுக்கக்கூடும், மேலும் கற்பழிப்பு, ஆபாச படங்கள் பார்ப்பது போன்ற செயல்களை ஏற்படுத்தக்கூடும்என்று அவர் கூறியிருந்தார்.