Home One Line P1 ஜாகிர் நாயக் தானாக முன்வந்து மலேசியாவிலிருந்து வெளியேற வேண்டும்!- லிம் கிட் சியாங்

ஜாகிர் நாயக் தானாக முன்வந்து மலேசியாவிலிருந்து வெளியேற வேண்டும்!- லிம் கிட் சியாங்

1215
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்துலக இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் தானாக முன்வந்து மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற எழுத்தாளர் அனஸ் ஜூபேடியின் பரிந்துரைக்கு ஜசெக கட்சி ஆலோசகர் லிம் கிட் சியாங் ஆமோதித்துள்ளார்.

அனஸின் காரணங்களை மேற்கோள் காட்டி, நாட்டின் நிலைத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுவதால், ஜாகிர் நாட்டை விட்டு வெளியேற வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாகிரின் இருப்பு இங்குள்ள குடும்பங்களில் குழப்பங்கள், இஸ்லாமியர் அல்லாதவர்களின் முஸ்லீம்கள் மீதான கருத்துகள், நாட்டில் மதத்தை ஒப்பிடுதல் மற்றும் நாட்டில் அரசியல் மீட்சியை தாமதப்படுத்தல் போன்ற நிலைகளை ஏற்படுத்திவிடும்.

#TamilSchoolmychoice

பிரசங்கத் துறையில் தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஒருவர் என்ற முறையில் ஜாகீரின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்திற்கு ஈர்ப்பதாகும் என்று அனஸ் கடுமையாக நம்புகிறார். ஆயினும், துரதிர்ஷ்டவசமாக, மலேசியாவில், அவரது இருப்பு முரண்படுகிறது, இது எதிர்வினையை விளைவிக்கும்என்று லிம் எழுதியுள்ளார்.

முன்னதாக, ஜாகிர் நாயக் மலேசியாவில் இருப்பது மலேசியாவிற்கு ஓர் இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், மத ஒப்பீட்டு விவாதம் இந்த நாட்டில் உள்ள மக்களிடையே எந்த மதிப்பும் இல்லை என்று லிம் கூறினார்.

மலேசியாவில், முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாமியம் குறித்து பிரசங்கிப்பதையோ, இஸ்லாம் குறித்த தங்கள் கருத்துக்களை தெரிவிக்கவோ முடியாது என்று அவர் கூறினார்.