Home One Line P2 பினாங்கு பாலத்திலிருந்து விழுந்த பெண்மணி உயிருடன் மீட்பு!

பினாங்கு பாலத்திலிருந்து விழுந்த பெண்மணி உயிருடன் மீட்பு!

827
0
SHARE
Ad
படம்: நன்றி ஸ்டார்

கோலாலம்பூர்: 36 வயது பெண் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) பினாங்கு பாலத்திலிருந்து விழுந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

தீவுக்குச் செல்லும் பாதையில் பாலத்தின் 6.8-வது கிலோ மீட்டரிலிருந்து அப்பெண் குதித்ததாகவும், மீண்டும் இரவு 10 மணியளவில் அவர் மீட்கப்பட்டார் என்றும் ஜோர்ஜ் டவுன் காவல் துறை துணைத் தலைவர் சாய்மானி சே அவாங் கூறினார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது காரை விட்டு வெளியேறியபின் பாலத்திலிருந்து குதித்ததைக் கண்டதாக சாட்சி ஒருவர் காவல் துறையிடம் கூறினார். இருப்பினும், தனது கார் பழுதாகி நின்றதாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார். தனது கார் பழுதடைந்ததும் தாம் பாலத்தின் அருகே உட்கார்ந்திருந்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறினார். பிறகு, அவர் இடறி பாலத்திலிருந்து கீழே விழுந்ததாகவும் கூறியுள்ளார்என்று சாய்மானி கூறினார்.

#TamilSchoolmychoice

பாதிக்கப்பட்டவருக்கு நீச்சல் தெரியாது என்று கூறியதாகவும், ஆனால் அவரது உடலை தண்ணீரில் மிதக்க வைக்கும் நுட்பங்கள் தெரியும் என்றும் சொன்னதாகவும் சாய்மானி குறிப்பிட்டார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் அந்த பெண்ணின் தாய் 17 நாட்களுக்கு முன்பு காலமானார் என்பது தெரியவந்ததாக ஏசிபி சே சாய்மானி தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரின் கணவரின் கூற்றுப்படி, அவரது தாயார் இறந்த பின்னர் அவர் மனச்சோர்வடைந்ததாகவும், பினாங்கு மருத்துவமனையில் மனநல சிகிச்சையைப் பெற்று வருவதாகவும் கூறினார்,” என்று சாய்மானி மேலும் கூறினார்.