Home One Line P1 அமெரிக்காவில் 20 பேர்களைச் சுட்டுக் கொன்ற 21 வயது இளைஞன்

அமெரிக்காவில் 20 பேர்களைச் சுட்டுக் கொன்ற 21 வயது இளைஞன்

1114
0
SHARE
Ad

எல் பாசோ (டெக்சாஸ்) – அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள எல் பாசோ என்ற நகரிலுள்ள பல்பொருள் விற்பனை அங்காடி வளாகத்தில் நேற்று சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்திய 21 வயது இளைஞன் ஒருவன் 20 பேர்களை சுட்டுக் கொன்றதோடு, 26 பேர்களை காயப்படுத்தியும் இருக்கிறான்.

அந்த 21 வயது வயது வெள்ளைக்கார இளைஞன், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 650 மைல்களுக்கு அப்பால் உள்ள டல்லாஸ் நகருக்கு அருகிலுள்ள எல்லென் என்ற ஊரைச் சேர்ந்தவராவார்.

டெக்சாஸ் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் இளைஞன் பேட்ரிக் குருஷியஸ்

அந்த இளைஞன் கைது செய்யப்பட்டிருப்பதோடு, அவன் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட காவல் துறையினர் தயாராகி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இன ரீதியான வெறுப்புணர்வோடு இந்த துப்பாக்கிச் சூட்டை அந்த இளைஞன் நடத்தியிருக்கிறான் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

அந்த இளைஞனின் பெயர் பேட்ரிக் குருஷியஸ் (Patrick Crusius) என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.