Home One Line P2 வேலூரில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

வேலூரில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

853
0
SHARE
Ad

சென்னை: வேலூர் மக்களவை தொகுதிக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கியது.

தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏசி. சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வேளையில் வருகிற  9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.