அதிகாலை 1.45 மணியளவில் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், ஈப்போவில் உள்ள கம்போங் தாவாஸ் காவல் நிலையத்தில் அந்த நபரை சந்தித்ததாக ஜசெக சட்டமன்ற உறுப்பினருமான அவர் கூறினார்.
“ஜசெக எப்போதும் மக்களின் பிரச்சனைகளையும், ஆலோசனைகளையும் கேட்கத் தயாராக உள்ளது. எங்கள் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும். மக்களுக்கும் தேசத்திற்கும் சிறந்த சேவையை வழங்குவதற்கான எங்கள் முயற்சிகளை நாங்கள் தொடர்வோம்,” என்று அவர் கூறினார்.
அந்த நபருக்கு எதிரான காவல் துறைப் புகாரையும் திரும்பப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் 30 முட்டைகளை தூக்கி எறிந்த வீடியோ தொற்றுநோய் போல் இணையத்தில் பரவியதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
காணொளி ஒன்றில், சம்பந்தப்பட்ட அந்நபர் ஜசெக சீனர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது என்றும், சீன கல்வியை அழிக்க முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
அரசாங்கத்தின் ஜாவி எழுத்தழகியல் பாடத் திட்டத்தின் அறிவிப்பிற்குப் பிறகு தமிழ் மற்றும் சீனப் பள்ளி ஆதரவாளர்களிடையே எதிர்ப்புகள் மேலோங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.