Home One Line P1 ஜம்மு- காஷிமீர் விவகாரம் குறித்து அமெரிக்காவிடம் தெரிவிக்கப்படவில்லை!

ஜம்மு- காஷிமீர் விவகாரம் குறித்து அமெரிக்காவிடம் தெரிவிக்கப்படவில்லை!

737
0
SHARE
Ad

வாஷிங்டன்: காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்வது குறித்து இந்தியா எங்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை என அமெரிக்கா வெளியுறவுத்துறை கூறியுள்ளது

தி பிரிண்ட் செய்தி வலைத்தளம் கடந்த திங்களன்று வெளியிட்ட செய்தியில், ஜம்முகாஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்படுவது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த தகவலை அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், காஷ்மீர் மறுசீரமைப்பு தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் எதிர்வினையாற்றிவரும் நிலையில், அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து, அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாபாகிஸ்தான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.