Home One Line P1 ஒருதலைபட்சமாக மத மாற்றம் செய்யும் சட்ட திருத்தத்தை சிலாங்கூர் ஜசெக அனுமதிக்காது!

ஒருதலைபட்சமாக மத மாற்றம் செய்யும் சட்ட திருத்தத்தை சிலாங்கூர் ஜசெக அனுமதிக்காது!

875
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிறார்களை ஒருதலைப்பட்சமாக மத மாற்றம் செய்ய அனுமதிக்க முன்மொழியும் எந்தவொரு மசோதாவையும் சிலாங்கூர் ஜசெக ஆதரிக்காது என்று அதன் தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

சிலாங்கூரில் இதுபோன்ற ஒருதலைப்பட்ச மத மாற்றங்களை அனுமதிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் அரசியலமைப்பிற்கு முரணானது.  இது மத்திய அரசியலமைப்பிற்கு முரணானதுஎன்று கோபிந்த் கூறினார்.

#TamilSchoolmychoice

“எம். இந்திரா காந்தி வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் அரசியலமைப்பில் பொருந்தக்கூடிய பெற்றோர் என்ற வார்த்தையின் அர்த்தம் இரு பெற்றோர்களையும் குறிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

எனவே, சிறார்களாக இருக்கும் தங்கள் குழந்தைகளின் மதத்தை தீர்மானிக்க இரு பெற்றோரின் தனிப்பட்ட உரிமை, இப்போது அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று வியாழக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த திருத்தத்தில் மாநில அரண்மனையின் அனுமதி இருந்த போதும், ​​பெரும்பான்மையான நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் இதை எதிர்க்கிறார்கள் என்று நேற்று புதன்கிழமை மலேசியாகினி செய்தி வெளியிட்டிருந்தது.