கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக், மலேசியாவில் உள்ள முஸ்லிம் அல்லாத சமூகம் உண்மையில் அவரை விரும்புகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இந்நாட்டில் தாம் இருப்பதை விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
“இவர்கள்தான் அரசியல் சூழ்ச்சிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மதச்சார்பற்ற மற்றும் பாசாங்குத்தனமான முஸ்லிம்கள்.” என்று அவர் கூறியுள்ளார்.
கோத்தா பாருவில் இன்று வியாழக்கிழமை கிளந்தானில் நடைபெற்ற ஓர் உரையாடலின் போது, “மலேசிய காவல்துறையை விட அவர்கள் இந்திய காவல்துறையை அதிகம் நம்புகிறார்கள்” என்று அவர் கூறினார்.