இருப்பினும், வேறு எந்த நாடும் ஜாகீரை ஏற்க தயாராக இருந்தால் மலேசியா, அதனை வரவேற்கிறது என்று மகாதீர் கூறினார்.
“அவரை (இந்தியாவுக்கு) திருப்பி அனுப்ப முடியாது, ஏனெனில் அவர் அங்கு கொல்லப்படுவதற்கான ஆபத்து உள்ளது. எனவே அவர் இங்கே (மலேசியாவில்) இருப்பார்” என்று அவர் குறிப்பிட்டார்.
டாக்டர் மகாதீரை விட மலேசிய நாட்டிலுள்ள இந்துக்கள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிக விசுவாசமுள்ளவர்கள் என்று கூறி ஜாகிர் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
முன்னதாக, மலேசியாவில் இந்துக்களின் விசுவாசத்தை கேள்விக்குட்படுத்தியதற்காக ஜாகிர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கோரிக்கை விடுத்திருந்தார்.