கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும், மூவார் நாடாளுமன்ற உறுப்பினருமான சைட் சாதிக் விரும்பம் தெரிவித்துள்ளார்.
வாட்சாப் பயன்பாட்டின் மூலம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், டாக்டர் ஜாகிர் நாயக் வெளியிட்ட அறிக்கை குறித்து தனது கோபத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.
“சீன மற்றும் இந்திய சகோதரர்கள் மீதான தாக்குதல்கள் அனைத்து மலேசியர்கள் மீதான தாக்குதல்” என்று அவர் கூறினார்.
வெளிப்படையாக, மலேசியர்களை விருந்தினர்கள் என்று அழைப்பது ஒரு அபத்தமான செயல்.
“மலேசிய சீனர்கள் இந்நாட்டு விருந்தாளிகள் இல்லை, ஆனால் மலேசியர்கள் இந்த நாட்டை நேசிக்கக்கூடியவர்கள். மலேசியாவின் வலிமை அதன் மக்களின் ஒற்றுமையில் உள்ளது. நமது ஒற்றுமையையும், விசுவாசத்தையும் குறைத்து மதிப்பிட்டது போதும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எங்கள் அன்பான நாட்டைக் காக்க இறக்கக்கூட தயாராக இருக்கும் பல சீன மற்றும் இந்தியர்களை நான் அறிவேன்,” என்று அவர் மேலும் கூறினார்.