கோலாலம்பூர்: கடந்த செவ்வாயன்று ஆற்றின் அருகே கண்டெடுக்கப்பட்ட அயர்லாந்தைச் சேர்ந்த சிறுமி நோரா அன் மரணம் தொடர்பாக பாரிஸ் வழக்கறிஞர் மன்றம் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சிரம்பானில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலிருந்து காணாமல் போன பத்து நாட்களுக்குப் பிறகு நோரா அன்னின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று புதன்கிழமை காலை தொடங்கிய ஆரம்ப பிரேத பரிசோதனை நிறைவடையவில்லை என்றும், நோராவின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய தடயவியல் நோயியல் நிபுணர்கள் இன்னும் செயல்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி கடத்தல் தொடர்பாக விசாரணையை பாரிஸ் வழக்கறிஞர் மன்றம் தொடங்கியது என்று அதன் செய்தித் தொடர்பாளர் ரோய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
பிரெஞ்சு வழக்கறிஞர்கள் வெளிநாடுகளில் பிரெஞ்சு குடிமக்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் குறித்து அடிக்கடி விசாரணைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நோராவின் தந்தை பிரெஞ்சுக்காரர். பிரெஞ்சு அதிகாரிகளின் விசாரணை குறித்து நெகிரி செம்பிலான் காவல் துறைத் தலைவர் முகமட் மாட் யூசோப் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
நோரா அன்னின் குடும்ப வழக்கறிஞரான சங்கரா நாயர் முன்னதாக, சிறுமியின் மரணம் குறித்து விசாரிக்க உதவ பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்–யவ்ஸ் லு ட்ரியன் அளித்த உதவியை ஏற்குமாறு காவல் துறையிடம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.