Home One Line P1 நோரா அன் பெற்றோர்கள் ‘டி டுசுன் ரிசார்ட்’ தங்கும் விடுதிக்கு எதிராக வழக்கு!

நோரா அன் பெற்றோர்கள் ‘டி டுசுன் ரிசார்ட்’ தங்கும் விடுதிக்கு எதிராக வழக்கு!

638
0
SHARE
Ad

சிரம்பான்: ஐரிஷ் சிறுமியான நோரா அன் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அவரது பெற்றோர்களான செபாஸ்டியன் மேரி பிலிப் மற்றும் மீப் குய்ரின் ஆகியோர், அக்குடும்பம் தங்கியிருந்த விடுதி அலட்சியத்தைக் கடைப்பிடித்ததாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

டி டுசுன் ரிசார்ட்டின் உரிமையாளர், ஹெலன் மரியன் டோட், அவ்வளாகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறிவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

தங்கும் விடுதியில் கண்காணிப்புக் கேமராக்களை பொறுத்தத் தவறிவிட்டதாகவும், தங்கள் அறையின் கதவு எளிதில் திறக்கக்கூடியதாக இருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நோரா அன் குடும்பத்தினரின் வழக்கறிஞர் சங்கரா நாயர் இந்த வழக்கினை நெகிரி செம்பிலான் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கு ஜனவரி 21-ஆம் தேதியன்று விசாரணைக்கு வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி நோரா அன் காணாமல் போன விவகாரம் உள்ளூர் மற்றும் அனைத்துலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. 10 நாட்கள் தேடும் நடவடிக்கைக்குப் பிறகு, நோரா அன் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.