சிரம்பான்: ஐரிஷ் சிறுமி நோரா அன் குய்ரின் (15) மரணம் குறித்து மலேசிய காவல் துறையினர் பிரெஞ்சு காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசிர் முகமட் தெரிவித்தார்.
அச்சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணையில் எந்தவொரு குற்றச் செயல்களும் சம்பந்தப்படவில்லை என்று அதிகாரிகள் முன்பு சிங்கப்பூரில் உள்ள பிரெஞ்சு தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியிருந்ததாக அவர் கூறினார்.
இந்த வழக்கு காணாமல் போனவர்கள் மற்றும் திடீர் மரண வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தங்களது 15 வயது மகளின் மரணத்தில் குற்றவியல் கூறு இருப்பதாக நோராவின் பெற்றோர்கள் முன்பதாக வலியுறுத்தினர்.
“எங்களுக்கு மிகவும் சிக்கலான ஒன்று நடந்துள்ளதாகத் தோன்றுகிறது. என்ன நடந்தது என்பதற்கு குற்றவியல் கூறு இருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்று ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தினோம்.”
“நாங்கள் கடுமையாக முயற்சிக்கிறோம், ஏனென்றால் குற்றத்தை விசாரிக்க போதுமான ஆதாரங்களைக் கண்டுபிடிப்பது கடினம்.”
“பிரேத பரிசோதனை ஒரு பதிலை மேற்கொண்ட போதிலும், நோராவின் மரணத்திற்கு வழிவகுத்தது என்பதற்கு சில அடிப்படை பதில்களைக் கொடுத்தாலும், அவர் அந்த இடத்தை அடைவதற்கான சாத்தியத்தை அது விளக்கவில்லை” என்று ஐரிஷ் ஊடகமான ஆர்டிஇ நியூஸுக்கு அளித்த பேட்டியில் நோராவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் மாதம் சிரம்பானில் தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்கு வந்திருந்த நோரா, வந்து சேர்ந்த ஒரு நாள் கழித்து காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.
மிகப் பெரிய தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை அமைக்கப்பட்டு, பின்பு பத்தாவது நாளுக்குப் பிறகு தங்கும் விடுதியின் 2.5 கி.மீ தூரத்திற்குள் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பிரச்சனை அனைத்துலக ஊடக கவனத்தையும் ஈர்த்தது.