Home One Line P1 “ஜாகிர் நாயக்கை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்!”- வீ கா சியோங்

“ஜாகிர் நாயக்கை நாட்டை விட்டு வெளியேற்றுங்கள்!”- வீ கா சியோங்

798
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் இன நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதால், மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு தடை செய்யப்பட வேண்டும் என்று டத்தோஶ்ரீ டாக்டர் வீ கா சியோங் கூறியுள்ளார்.

ஒரு வெளிநாட்டவர் மற்றும் குற்றவாளியான அவர், இந்நாட்டு சீன குடிமக்களை நாட்டை விட்டு வெளியேறச் சொல்லவது நியாயமா? அவர் யார்? மலேசியாவில் அவர் ஏற்றுக்கொண்டது மனிதாபிமான அடிப்படையில் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியதை நினைத்துப் பார்த்து, ஜாகிர் கொஞ்சம் சுய மரியாதையுடன் இருக்க வேண்டும், ”என்று மசீச தலைவருமான அவர் கூறினார்.

நேற்று புதன்கிழமை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட வீ கா சியோங், ஜாகிர் ஆணவத்துடன் நடந்துகொள்வதற்கும், புண்படுத்தும் கருத்துக்களைச் சொல்வதற்கு பதிலாக, மலேசியாவின் பன்முக மற்றும் பன்முக கலாச்சார வழிகளையும், அனைவரின் உணர்திறனையும் மதிக்க வேண்டும் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

ஜாகீரின் சொற்களும், நடத்தையும் பெரும்பாலும் சர்ச்சைக்குரியவை. மேலும், அவை எல்லா இன மக்களிடமும், குறிப்பாக இந்துக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. அவரை இங்கு வைத்திருப்பது நமது இன உறவுகளுக்கு அதிக சிக்கல்களைத் தரும்,”என்று அவர் கூறினார்.

பல இன மலேசியா அனுபவிக்கும் நல்லிணக்கத்தையும் செழிப்பையும் அடைவது எளிதான காரியமல்ல. நம் சமூக அமைதி மற்றும் இன உறவுகளை அழிக்க நமக்கு ஒரு சுயநீதியுள்ள வெளிநாட்டவர் தேவையில்லை.” என்று அவர் விவரித்தார்.

சீனர்கள் மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் மற்றும் மலேசிய வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் மரபுகளில் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சரியான குடிமக்கள் என்று டாக்டர் வீ கூறினார்.