Home One Line P1 ஜாகிர் நாயக்: நாட்டின் அமைதியைக் கெடுப்பது உறுதிசெய்யப்பட்டால் அவரது குடியுரிமை இரத்து செய்யப்படும்!

ஜாகிர் நாயக்: நாட்டின் அமைதியைக் கெடுப்பது உறுதிசெய்யப்பட்டால் அவரது குடியுரிமை இரத்து செய்யப்படும்!

739
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் நாட்டின் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டிருந்தது, காவல் துறை விசாரணையில் கண்டறியப்பட்டால், அவரது நிரந்தர குடியுரிமையை அரசாங்கம் இரத்து செய்யும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.

சமூகத்தில் இனவெறி கருத்துகளை, ஆத்திரமூட்டும் உரைகளை ஜாகிர் தொடர்ந்து செய்வதைத் தடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று டாக்டர் மகாதீர் கூறினார்.

நேற்று வெள்ளிக்கிழமை, உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின், ஜாகிர் நாயக் இது குறித்து விசாரிக்கப்படுவார் என்று கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

ஜாகீர் மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற பரிந்துரையை டாக்டர் மகாதீர் நிராகரித்தார்.

இது பொதுமக்களின் கோபத்தை குறைக்கும் என்று நான் நினைக்கவில்லை. எனவே இப்போதைக்கு, அறிக்கையின் தீவிரத்தை விசாரிப்பது காவல் துறையினரின் பொறுப்பாகும்என்று அவர் கூறினார்.

கடந்த 2012-இல் தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் நிரந்தர குடியுரிமையைப் பெற்ற ஜாகிர், மலேசிய சீனர்கள் மலேசியாவின் நீண்டகால விருந்தினர்கள் என்று வர்ணித்தது, பொதுமக்களின் கோபத்தை தூண்டியது. அத்துடன் மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் பிரதமருக்கான விசுவாசத்தைக் குறித்து கேள்வி எழுப்பியதும் மக்களின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இருந்ததை அடுத்து அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.