சிரம்பான்: நோரா அன்னின் குடும்பத்தினர் இங்குள்ள துவாங்கு ஜாபார் மருத்துவமனையில் இருந்து அச்சிறுமியின் உடலைப் பெற்றுக் கொண்டனர்.
ஆவணங்கள் சரிபார்த்த பின்பு, அவரது சடலம் இன்று சனிக்கிழமை அதிகாலை 12.42 மணிக்கு தடயவியல் மருத்துவத் துறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது.
இருப்பினும், நோரா அன் பெற்றோர்களான செபாஸ்டியன் மேரி பிலிப் மற்றும் மீப் ஜாசெப்ரின் குய்ரின் ஆகியோர் அப்பகுதி வளாகத்தில் காணப்படவில்லை.
“உடல் இப்போது உரிமை கோரப்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகளால் எனக்குத் தெரிவிக்கப்பட்டது. சடலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று அறியப்படுகிறது” என்று நெகிரி செம்பிலான் காவல் துறைத் தலைவர் டத்தோ முகமட் மாட் யூசோப் கூறினார்.
15 வயது நிரம்பிய கற்றல் குறைப்பாடுகள் உடைய சிறுமியின் உடல் கடந்த செவ்வாய்க்கிழமை பாண்தாயில் உள்ள தங்கும் விடுதியிலிருந்து 2.5 கி.மீ தூரத்தில் காணப்பட்டது.