Home One Line P1 ஜாகிர் நாயக்கின் காவல் துறை புகாரை ஏற்கிறோம், நீதிமன்றத்தில் சந்திக்கலாம்!

ஜாகிர் நாயக்கின் காவல் துறை புகாரை ஏற்கிறோம், நீதிமன்றத்தில் சந்திக்கலாம்!

782
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தங்கள் மீது பதிவு செய்த காவல் துறை புகார் அறிக்கையை ஐவரும் வரவேற்றுள்ளனர்.

மனிதவளத்துறை அமைச்சர் எம். குலசேகரன், பினாங்கு துணை முதலவர் பி.ராமசாமி, கிள்ளாங் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு, பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் எம். சத்திஸ் மற்றும் முன்னாள் தூதர் டென்னிஸ் ஜே இக்னேஷியஸ் ஆகியோர் அதனை ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, தாம் மன்னிப்புக் கேட்க விரும்பவில்லை என்றும், ஜாகிரை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்றும் அமைச்சர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஜாகிருக்கு எதிராக ஊடகங்களில் தாங்கள் அவதூறு செய்ததற்காக சட்ட அறிக்கையை ஜாகிரின் வழக்கறிஞர்கள் அனுப்பக்கூடும் என்று தாம் நம்புவதாக இராமசாமி இன்று சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறினார்.

ஜாகிருக்கு எதிரான எனது போர் தனிப்பட்டதல்ல. ஆனால் வெறுப்பு மற்றும் குழப்பம் இல்லாத நாட்டில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் விரும்பும் மலேசியர்களின் நலன்களுக்காகஎன்று அவர் கூறினார்.

நேற்று வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட காவல் துறை புகாரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மத போதகரான ஜாகிர், இவர்கள் ஐவரும் தங்களது அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளில் தம்மை பற்றி அவதூறு செய்ததாக குற்றம் சாட்டினர்.

ஆகஸ்ட் 8-ஆம் தேதி கிளந்தானில் ஜாகிர் கூறிய கருத்துக்கள், இந்து மலேசியர்களுக்கு அவமரியாதையாகக் கருதப்பட்டது.

நேற்றிரவு தம் முகநூல் பதிவில், தாம் காவல் துறையினரின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க இருப்பதாக சார்லஸ் சந்தியாகு தெரிவித்தார்.

இதற்கிடையில், ஜாகிரைப் போலல்லாமல், தாம் எங்கும் ஓடமாட்டார்என்றும், தமதுஅறிக்கையில்ஒருகுற்றக்கூறுஇருந்தால்காவல் துறையினர்விசாரித்துதம் மீதுகுற்றம்சாட்டலாம்என்றும் குறிப்பிட்டிருந்தார்.

நான் இந்தியா அல்லது வேறு எந்த நாட்டிற்கும் ஓடமாட்டேன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அல்லது பிறருக்குப் பின்னால் ஒளிந்து கொள்ள மாட்டேன். நாங்கள் எங்கள் தாய் நாட்டில் சட்டத்தை எதிர்கொள்வோம்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.