Home One Line P1 முடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்!

முடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்!

832
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் நேற்று வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததை அடுத்து, அவரது சிலை இன்று சனிக்கிழமை கோவில் குளத்துக்குள் வைக்கப்படுகிறது

அவ்வகையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் கோவிலில் அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வந்தனர்.

இன்று அதிகாலை அத்திவரதருக்கு பரிகார பூஜை தொடங்கியது. அடுத்த 40 ஆண்டுகளுக்கு சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சாம்பிராணி தைலம் உள்ளிட்ட மூலிகை திரவியங்கள் அத்திவரதர் சிலைக்கு பூசப்பட்டது.

#TamilSchoolmychoice

பின்னர், இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. இதனை அடுத்து, 40 ஆண்டுகளுக்கு பிறகு, அதாவது 2059-ஆம் ஆண்டு மீண்டும் அத்திரவரதர் மீண்டும் காட்சியளிப்பார்.