Home 13வது பொதுத் தேர்தல் பாஸ் உதவித்தலைவர் மாட் சாபு கெடா மாநிலத்தில் போட்டியிடுகிறார்

பாஸ் உதவித்தலைவர் மாட் சாபு கெடா மாநிலத்தில் போட்டியிடுகிறார்

807
0
SHARE
Ad

sabu

பெட்டாலிங் ஜெயா, ஏப்.5-  பாஸ் கட்சியின் உதவித்தலைவர் முகமட் சாபு கெடா பெண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக நேற்று தெரிவித்தார்.

பாஸ்  கட்சியின் தலைவர்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு பின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

கடந்த பொதுத்தேர்தலில் மாட் சாபு கோல திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட போது தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ ரசாலி இஸ்மாயிலிடம் 628 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளை பாஸ் கட்சியின் உதவித்தலைவர் டத்தோ ஹூசாம் மூசா புத்ரா ஜெயா நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ துங்கு அட்னான் துங்கு மன்சோரை எதிர்த்து போட்டியிடுவார்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.