Home One Line P1 ஜாகிர் நாயக்கிடம் இரண்டாவது நாளாக 10 மணி நேரம் விசாரணை

ஜாகிர் நாயக்கிடம் இரண்டாவது நாளாக 10 மணி நேரம் விசாரணை

754
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை சர்ச்சைக்குரிய மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக்கை மீண்டும் புக்கிட் அமான் தலைமையகத்திற்கு வரவழைத்த காவல் துறை அவரிடம் இரண்டாவது நாளாக சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றது.

மலேசிய இந்துக்கள் மற்றும் சீனர்களை ஜாகிர் நாயக் அவமதித்ததாகக் கூறப்படும் விசாரணை  திங்கட்கிழமை தொடரும் என்று குற்றவியல் புலனாய்வு பிரிவு இயக்குனர் ஹுசிர் முகமட் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

ஏற்கனவே, கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) ஜாகிர் புக்கிட் அமான் வரவழைக்கப்பட்டு சுமார் 7 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் தனது வழக்கறிஞருடன் புக்கிட் அமான் வந்தடைந்த ஜாகிர் நாயக் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் அங்கிருந்து தனது டொயோட்டா இன்னோவா காரில் வெளியேறினார்.

அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில்  அவமதிப்பு உரையாற்றியதற்காக குற்றவியல் பிரிவு 504-இன் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார்.

கிளந்தானில் அவர் ஆற்றிய உரை தொடர்பில் 115 புகார்கள் இதுவரையில் காவல் துறையில் செய்யப்பட்டுள்ளன.

அவருக்கு 2015-ஆம் ஆண்டில் மலேசியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

2016-முதல் அவர் இந்திய அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.