Home One Line P1 சுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்

சுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்

568
0
SHARE
Ad

புதுடில்லி – (மலேசிய நேரம் இரவு 11.30 மணி நிலவரம்) இன்று புதன்கிழமை இரவு இந்திய நேரம் 8.30 மணி வாக்கில் காங்கிரஸ் தலைமையகத்தில் திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் தோன்றி, முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட அறிக்கை ஒன்றை வாசித்த பின் தனது புதுடில்லி இல்லம் திரும்பிய சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமுலாக்க அதிகாரிகள் பின்தொடர்ந்து வந்தனர்.

அவரது இல்லம் வந்தபின் பலமுறை அழைப்பு மணியை அழுத்தியும் யாரும் கதவைத் திறக்காத காரணத்தால், வீட்டைச் சுற்றியிருந்த தடுப்புச் சுவரேறி வீட்டினுள் நுழைந்த அதிகாரிகள் தற்போது சிதம்பரம் வீட்டின் வாசல் முன் குழுமியிருக்கின்றனர்.

எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.