Home One Line P1 இங்கிலாந்து: ஜாகிர் நாயக்கின் பீஸ் டிவி வெறுப்புணர்வு, கொலை செய்யத் தூண்டுகிறது!

இங்கிலாந்து: ஜாகிர் நாயக்கின் பீஸ் டிவி வெறுப்புணர்வு, கொலை செய்யத் தூண்டுகிறது!

956
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இங்கிலாந்து ஒளிபரப்பு கட்டுப்பாடு துறை, டாக்டர் ஜாகிர் நாயக்கின் பீஸ் டிவி வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளைக் கொண்டுள்ளதைக் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்திய முஸ்லீம் போதகரான அவர் மலேசியாவில் இனவெறி குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கி வருவதால் அதன் உரிமம் இரத்து செய்யப்படும் அபாயம் இருப்பதாக பிரி மலேசியா டுடே பதிவிட்டுள்ளது.

இங்கிலாந்து தொலைத் தொடர்பு மற்றும் தபால் துறைகளில் பரந்த அதிகாரங்களைக் கொண்ட ஆப்கோம் எனப்படும் இங்கிலாந்து அரசாங்கத்தின் ஒழுங்குமுறைக் குழு, ஓரினச்சேர்க்கை மற்றும் குற்றவியல் தூண்டுதலின் புகார்களைத் தொடர்ந்து பீஸ் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஐந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆராய்ந்ததாகக் கூறியது.

ஐந்து நிகழ்ச்சிகளில் நான்கு நிகழ்ச்சிகள் சட்டத்திற்கு எதிரான கருத்துகளை பேசியுள்ளதாக ஆப்காம் முடிவு செய்துள்ளது, ஆனால், மேலும், ஒன்று அவ்வாறு செய்யவில்லைஎன்று அக்குழுவின் கடந்த மாதம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

குற்றத்தைத் தூண்டுவது, வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் தவறான அறிவுரைகள் ஆகியவை இதில் அடங்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டனின் அரசியலமைப்பின் கீழ் எந்தவொரு மத போதகர்களையும், தங்களின் கருத்துகளை வெளியிடுவதில் தடுக்கவில்லை என்றும், ஆனால், பிறரை புண்படுத்தவோ, அதிர்ச்சியடையவோ அல்லது தொந்தரவு செய்யவோ கூடிய பேச்சுகளை இங்கிலாந்து எதிர்க்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

துபாயில் இருந்து ஒளிபரப்பப்படும் பீஸ் டிவி, ஜாகிர் நாயக்கின் வணிக சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகும்.