ஈப்போ: இந்தோனிசியப் பணிப்பெண்ணை பாலியல் பலத்காரம் செய்ததாக, பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங், இன்று வெள்ளிக்கிழமை ஈப்போ அமர்வு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.
அக்குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். துணை அரசு வழக்கறிஞர் யோங்கிற்கு இரண்டு உத்தரவாதத்துடன் 20,000 ரிங்கிட் பிணைப்பணம் விதிக்குமாறு கோரினார், ஆனால் நீதிபதி ஒருவர் உத்தரவாதத்துடன் 15,000 ரிங்கிட் பிணைப்பணத்தை நிர்ணயித்தார்.
வருகிற செப்டம்பர் 24-ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.
ஜசெக துணை இளைஞர் பகுதித் தலைவர் லியோங் சியோக் கெங், யோங்கின் வழக்கறிஞராக பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் மற்றும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்பால் சிங் ஆகியோரும் யோங் தரப்பில் பிரதிநிதிக்க உள்ளனர்.