Home One Line P1 உதாரணத்திற்காக தமிழ் சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை இழிவுப் படுத்துவதா? பிரதமர் மீது மக்கள் காட்டம்!

உதாரணத்திற்காக தமிழ் சமூகத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை இழிவுப் படுத்துவதா? பிரதமர் மீது மக்கள் காட்டம்!

1048
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை லினாஸ் நிறுவனம் தொடர்பான ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தமிழ் சமூகத்தில் உள்ள ஒரு பிரிவினரைக் குறித்துப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

அவ்வாறு இவர் பேசுவது முதல் முறை இல்லையானாலும், பிரதமர் பதவியில் இருந்து கொண்டு இம்மாதிரியான சொற்களை பயன்படுத்துவதை இந்தியர்கள் வன்மையாக கண்டித்து வருகிறார்கள். பேச வேண்டிய விவகாரம் லினாஸ்சைப் பற்றி இருக்கும் போது, உதாரணத்திற்காக ஒரு பிரிவினரின் இருப்பை இழிவாகப் பேசிய பிரதமரின் நோக்கத்தை பலர் விமர்சித்து வருகின்றனர்.

சுற்றுலா மாநாடு ஒன்றை நேற்று இங்கு தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார். லினாஸை குறிப்பிட்ட அந்த சமூகத்தினரைப் போல நடத்தி இந்நாட்டை விட்டு வெளியேறச் சொன்னால், மற்றவர்கள் இந்நாட்டிற்கு வந்து முதலீடு செய்ய வைக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். இவ்வாறாக அவர் கூறிய கருத்து இந்தியர்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

வெளிநாட்டிலிருந்து வந்த ஜாகிருக்கும், இந்நாட்டில் பிதரமர் பதவியில் இருந்து கொண்டு மலேசியாவில் வாழும் ஒரு பிரிவினரை தேவையற்ற உதாரணத்திற்காகப் பயன்படுத்திய பிரதமருக்கும் என்ன வேறுபாடு உள்ளது என்று ஒரு சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், இது குறித்து இந்திய அமைச்சர்கள் வாய் திறக்காமல் இருப்பதையும் பலர் சமூகப் பக்கங்களில் குறிப்பிட்டு வருகின்றனர். முன்னதாக, ஜாகிர் நாயக் விவகாரத்தில் பிரதமர் மகாதீரின் மீது சீற்றம் கொண்டுள்ள முஸ்லிம் அல்லாத மக்கள், இந்த விவகாரத்திற்குப் பிறகு அவரை நேரடியாக வெறுப்பதற்கும் வழிவகுத்துள்ளது.