Home One Line P1 “எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை நிகழ்ச்சியை ஜாகிம் குறி வைப்பது நியாயமில்லை!”- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

“எஸ்.பி.பாலசுப்ரமணியம் இசை நிகழ்ச்சியை ஜாகிம் குறி வைப்பது நியாயமில்லை!”- நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்

706
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இங்குள்ள கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் வருகிற ஆகஸ்டு 31-ஆம் தேதி இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் நடைப்பெற இருந்த எஸ்.பி. பாலசுப்ரமணியமின் இசை நிகழ்ச்சியின் நேர மாற்றத்தைக் கோரும் ஜாகிமுக்கு எதிராக ஏற்பாட்டுக் குழு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இஸ்லாமியர்கள் அன்றைய தினம் இஸ்லாமிய புத்தாண்டைக் கொண்டாட இருப்பதால் அன்றைய தினத்தில் எந்தவொரு கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்படக் கூடாது என்று ஜாகிம் தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராகவ் புரொடக்க்ஷன்ஸ் ஜாகிம்மின் முடிவை மறுப்பதாக அறிவித்துள்ளது. ஜாகிம்மின் கூற்றுபடி இரவு 7.30 மணிக்குப் பிறகு நிகழ்ச்சியை நடத்துவது முஸ்லிம்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இறுதியில் இன பதட்டங்களுக்கு வழிவகுக்கும் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“நிகழ்ச்சியின் அட்டவணையை மாற்றுவதில் எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஓர் இந்துவாக, நான் விதிகளை மதிக்கிறேன், நாங்கள் முஸ்லிம்களை அவமதிக்க விரும்பவில்லை. இருப்பினும், எங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைப் போலவே, இரவு 7.30 மணிக்கு பிறகு அனைத்து கேளிக்கை விடுதிகளும் மூடப்பட வேண்டும். அவர்களால் அதைச் செய்ய முடியாவிட்டால், இந்த நிகழ்ச்சியை நிறுத்துவது நியாயமில்லை ”என்று நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் குழு கேட்டுக் கொண்டது.

முன்னதாக, இரவு 7 மணிக்குப் பிறகு எந்த இசை நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்று ஜாகிம் அறிவுறுத்தியதாக புஸ்பால் ஏற்பாட்டாளருக்கு அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களிடமிருந்து ஒப்புதல் பெறுவதற்கு முன்னர் நுழைவுச் சீட்டுகளை விற்க வேண்டாம் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை புஸ்பால் எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 31 ஆம் தேதி இரவு 7 மணி முதல் இரவு 11 மணி வரை இசை நிகழ்ச்சியை நடத்த அமைப்பாளர்களுக்கு எந்த ஆதரவு கடிதமும் வெளியிடவில்லை என்று அது கூறியது.

அவல் முஹர்ரம் மற்றும் மால் ஹிஜ்ரா ஆகியோரின் முஸ்லீம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடமளிக்கும் வகையில் இரண்டு இசை நிகழ்ச்சிகளை மறுசீரமைப்பது குறித்த சலசலப்புக்கு மத்தியில், இதுபோன்ற ஒப்புதல்கள் இல்லாமல் நிகழ்வுகள் தொடர அனுமதிக்கப்படாது என்று அந்த நிறுவனம் கூறியது.