ஜோகூர் பாரு: இன்று புதன்கிழமை காலை பள்ளியில் துர்நாற்றம் வீசியதாக புகார் எழுந்ததையடுத்து பாசிர் கூடாங்கில் உள்ள பாசிர் புதே தேசியப் பள்ளியைச் சேர்ந்த 33 மாணவர்கள் வாந்தி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.
ஜோகூர் மாநில கல்வித் துறை துணை இயக்குனர் அப்துல் ராகிம் லாமின் கூறுகையில், காலை 7.30 மணியளவில் 25 மாணவர்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்ததாகவும், பிறகு 9 மணியளவில் அது 33 மாணவர்களாக உயர்ந்ததாகக் கூறினார்.
அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பாசிர் கூடாங் சுகாதார மையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், தகுந்த நடவடிக்கைகளுக்காக பள்ளி நிருவாகம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினரை தொடர்பு கொண்டதாகவும் அப்துல் ராகிம் கூறினார்.
இருப்பினும், மூன்றாம் மற்றும் நான்காம் அடுக்குகளில் இருக்கும் மாணவர்கள் அனைவரையும் கீழ் மட்ட நிலைகளுக்கு மாற்றியதாக அவர் கூறினார். பள்ளி எப்போதும் போல செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.