சென்னை: இயக்குனர் சாந்தகுமார் மௌனகுரு திரைப்படத்தினை இயக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது மற்றும் அருள்நிதி இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இந்தி மொழியில் “அகிரா” என்று மீண்டும் இயக்கியிருந்தார். அப்படத்தில் இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடித்திருந்தார்.
இப்போது, ஸ்டுடியோ கிரீன் கே.ஞானவேல் ராஜாவால் தயாரிக்கப்படும் மகாமுனி எனும் படத்தினை சாந்தகுமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் ஆர்யா முக்கியக் கதாபாத்திரதித்ல் நடித்துள்ளார். இந்துஜா மற்றும் குற்றம் 23 புகழ் மஹிமா நம்பியார் ஆகியோர் பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வருகிற செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் இப்படம் திரைக்கு வர உள்ள நிலையில், இப்படத்தின் சிறப்புக் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இதில், ஆர்யா முதுகில் கத்திக்குத்தப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகிறார்.
முதுகில் குத்தப்பட்டிருந்த கத்தியை மயக்க மருந்து எதுவும் கொடுக்காமல், அக்கத்தியை எடுக்கும் காட்சியில் பிரமாதமாக நடித்து இரசிகர்களின் வரவேற்பை ஆர்யா பெற்றுள்ளார். கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் அக்காணொளியைக் காணலாம்: